அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அவரது முன்னாள் சட்டத்தரணியை நாடாளுமன்றதில் பொய் சொல்லும்படிக் கட்டளையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என்று வெள்ளை மளிகை சாடியுள்ளது.
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் ரஷ்யாவுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகள் பற்றி நாடாளுமன்ற விசாரணை இடம்பெற்றது.
அதில் பொய்யுரைக்குமாறு சட்டத்தரணி மைக்கல் கோஹனுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆகக் கடுமையான அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கப் போவதாக ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர்.
டிரம்ப் மாஸ்கோ திட்டத்தைப் பற்றிப் பொய் கூறும்படித் தம்மிடம் தனிப்பட்ட முறையில் கட்டளையிட்டதாக, சட்டத்தரணி கோஹன், நாடாளுமன்றப் புலனாய்வுக் குழுவிடம் தெரிவித்தாய் BuzzFeed செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
திரு. கோஹன் சிறையில் கழிக்க நேரிடும் காலத்தைக் குறைக்கும் நோக்கில் அவ்வாறு பொய் கூறுவதாக அதிபர் டிரம்ப் கூறினார்.