57 வருடங்களாக கர்ப்பம் ஆகாத 74 வயது பாட்டி மங்கயம்மா தனது முதலாவது பிரவசத்திலேயே இரட்டை குழந்தைகள் பிறசவித்துள்ளார். கரு திசு முறையில் இரண்டு பெண் குழந்தைகள் பெற்றெடுத்த அந்த பாட்டி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நிலபார்த்திபுடி கிராமத்தைச் சேர்ந்தவர் யர்ரம்செட்டி ராஜாராவ். இவரது மனைவி மங்கயம்மா. தற்போது 74 வயதாகிவிட்ட மங்கயம்மா திருமணம் ஆகி 57 வருடங்களில் ஒருமுறை கூட கர்ப்பம் ஆகவில்லை..
இதனால் குழந்தை இல்லாமலேயே வாழ்க்கை முடிந்துவிடுமோ என்று மிகுந்த கவலைப்பட்டார். எனினும் குழந்தை பிறப்புக்கான தற்போதைய நவீன மருத்துவ முறைகளையும் பலமுறை பரிசோதித்துள்ளார். சென்னைக்கு கூட வந்து பரிசோதனை செய்துள்ளார்.
ஆனால் குழந்தை பாக்கியம் தான் மங்கயம்மா பாட்டிக்கு கைகூடவில்லை. 4 வயது பாட்டிக்கு டுவின்ஸ் எனினும் மனம் தளராத மங்கயம்மா குண்டூரில் உள்ள ஒரு தனியார் கருத்தரித்தல் மையத்தை நாடியுள்ளார்.
அங்கு மங்கையம்மா மற்றும் அவரது கணவரை பரிசோதித்த மருத்துவர்கள் மங்கயம்மாவுக்கு சிகிச்சையை கடந்த ஆண்டு தொடங்கினர். தற்போது அவருக்கு கருத்திசை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.
மருத்துவர் பேட்டி இது தொர்பாக குண்டூர் மருத்துவர் சங்கரலாயா உமா சங்கர் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு முன்னர் மங்கயம்மா மற்றும் அவரது கணவரை பரிசோதித்தோம். அதன்பின்னர் வேறு ஒரு பெண்ணிடம் கருப்பையை தானமாக பெற்று மங்கையம்மாவுக்கு வயிற்றில் சிறிய அறுவை சிகிச்சை மூலம் வைத்தோம். தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு மெனோபஸ் வளர்ந்தது.
இதையடுத்து நாங்கள் கரு திசை (ivf) சிகிச்சை அளித்தோம். 74வயதாகும் மங்கயம்மாவுக்கு சர்க்கரை வியாதியோ அல்லது ரத்தக்கொதிப்போ இல்லை. இதனால் எங்கள் வேலை மிக எளிதாக இருந்தது. இந்த சிகிச்சையின் போது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய மங்கயம்மா மற்றும் அவரது கணவருக்கு உளவியல் ரீதியாகவும் நாங்கள் ஆலோசனை அளித்தோம். குறிப்பாக மங்கயம்மாகவுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக பலகட்டமான மனரீதியாக கவுன்சிலிங் வழங்கினோம்.
இதன் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோராக மாறுவதற்கு தயாரானார்கள்" என்றார். இதனிடையே இரட்டை குழந்தை பிறந்ததால் 57 வருட கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மங்கயம்மா உள்ளார்.
அவருடன் மங்கயம்மாவின் 95 வயது அம்மா மருத்துவமனைக்கு வந்து தனது மகளை அருகில் இருந்து கவனித்து வருகிறார். 95 வயது தாயும் 74 வயது மகளும் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்த சம்பவம் மொத்த ஆந்திராவையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.