பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெறும் வருடாந்த உயர் மட்ட ஐ.நா பொதுச் சபை அமர்வில் உரையாற்றுவார்,
மேலும் நியூயார்க்கில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் தங்கியிருந்து இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளார்.
பிரதமர் என்ற முறையில், மோடி 2014இல் ஐ.நா பொதுச் சபையில் உலகத் தலைவர்கள் மத்தியில் தனது முதல் உரையை நிகழ்த்தியிருந்தார்.
செப்டம்பரில் அவர் மேற்கொள்ளப்போகும் வருகையும், உரையும் மோடியின் ஐ.நா பொதுச்சபை கூட்டத்திற்கான, 2ஆவது பயணமாக மாறப்போகிறது.
பேச்சாளர்கள் வழங்கியுள்ள பட்டியலின்படி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செப்டம்பர் 27 ஆம் திகதி உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
மோடியின் உரைக்கு பிறகு அதே நாளில் இம்ரான் கான் உரையாற்றுவார். முதல்கட்ட பேச்சாளர்களின் பட்டியலில் சுமார் 48 நாட்டு தலைவர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட வெளியுறவு அமைச்சர்கள் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்ற நியூயார்க்கிற்கு வர உள்ளார்கள்.
ஐ.நா.பொது அமர்வு செப்டம்பர் 24ம் திகதி தொடங்கி செப்டம்பர் 30 வரை இயங்கும்.
2017 ஆம் ஆண்டில் பொதுச் சபை மண்டபத்தின் சின்னமான பச்சை மேடையில் இருந்து உலகளாவிய தலைவர்களுக்கு தனது முதல் உரையை வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காலை உயர் மட்ட அமர்வில் உரையாற்றவுள்ளார்.
செப்டம்பர் 24. அமெரிக்கா பாரம்பரியமாக பிரேசிலுக்குப் பிறகு பொது விவாதத்தின் தொடக்க நாளில் இரண்டாவது பேச்சாளராக உள்ளார்.