மலேசியாவின் பத்துமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் அருகே பட்டாசு வெடிப்பால் 34 பேருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தைப்பூசத் திருவிழாவின் போது அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
இரவு 8.30 மணியளவில் இரண்டு நண்பர்களுடன் வந்த ஓர் ஆடவர் மிடில் ரிங் ரோடு 2க்கு அருகே உள்ள சாலைச் சந்திப்பில் பட்டாசைக் கொளுத்தியதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்தது.
வானத்தில் வெடிக்கவேண்டிய பட்டாசுகள், சாலையில் வெடித்தன. இதனால், அந்த இடத்தில் இருந்தவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டன.
காயமடைந்தவர்களில் 6 பேர், மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற்ற 28 பேர் அருகே உள்ள மருந்தகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவத்தில் மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. தைப்பூசத் திருவிழாவில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படவில்லை என்று மலேசியக் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து இருவரைக் பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.