தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட ஏழு பேர் தூக்கு தண்டனை பெற்றனர். பின்னர் இவர்களது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார்.