சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமெரிக்காவின் விசேட படையணியொன்று மேற்கொண்ட தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
அமெரிக்காவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளதுடன் மரபணு பரிசோதனை முடிவடைந்த பின்னரே இறுதி அறிவிப்பு வெளியாகும் என சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க படையினர் தாக்குதலை மேற்கொண்டவேளை ஐஎஸ் அமைப்பின் தலைவர் தனது தற்கொலை அங்கியை வெடிக்கவைத்து மரணித்துள்ளார் போல தோன்றுகின்றது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிஐஏயினரின் உதவியுடன் ஐஎஸ் அமைப்பின் தலைவர் மறைந்து இருந்த இடத்தை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.