web log free
December 04, 2024

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னையில் மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். தேசியக்கொடியை ஏற்றி வைத்தபோது விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

குடியரசு தினவிழாவையொட்டி சென்னை சென்னையில் குடியரசு தினவிழாவையொட்டி மெரினா, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற பகுதிகளில் கடலோர பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் கூடுதல் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd