web log free
October 25, 2025

சிறுவனை தாக்க முயன்ற புலி வைரலாகும் வீடியோ

அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் நகரில் டப்ளின் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது.அந்த பூங்காவிற்கு கடந்த 22ந்தேதி தனது பெற்றோருடன் சிறுவன் ஒருவன் சுற்றுலா பயணமாக சென்றுள்ளான்.

அங்கிருந்த விலங்குகளை ரசித்து கொண்டு ஓரத்தில் நின்று நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் புலி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. ஆனால் அந்த சிறுவன் அதை கவனிக்கவில்லை.

அப்போது திடீரென அந்த சிறுவன் திரும்பி பார்த்துள்ளார். அப்போது அந்த புலி பொம்மை போன்று அசையாமல் நின்றுள்ளது. பின்னர் சிறுவன் திரும்பும் வரை காத்திருந்த புலி, சிறுவன் திரும்பியதும் சிறுவனை நோக்கி வேகமாக ஓடிவந்துள்ளது.

பின்னர் அந்த சிறுவனின் மீது பாய்ந்துள்ளது.ஆனால், உடைக்க முடியாத கண்ணாடிக்கு இந்த பக்கம் சிறுவன் நின்றுகொண்டிருந்ததால் உயிர் தப்பியுள்ளார்.ஆனால் திடீரென புலி பாய்ந்தது சிறுவனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Last modified on Friday, 27 December 2019 15:48
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd