web log free
December 04, 2024

விமானம் - ஹெலிகாப்டர் மோதி விபத்து; 7 பேர் பலி

இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே அஸ்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

அங்கு உள்ள மலையில் ஏறுவதற்காக 4 பேர் ஹெலியில் சென்றனர். விமானி மற்றும் மலையேற்ற பயிற்சியாளர் ஒருவர் ஹெலிக்கொப்டரில் இருந்தனர்.

இதற்கிடையே பயிற்சி விமானிகள் 3 சிறிய ரக விமானத்தில் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பயிற்சியாளர் விமானத்தில் இருந்தார்.

சற்றும் எதிர்பாராத விதமாக ஹெலியும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் மாயமாகினர்.

விமான பயிற்சியாளர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd