ஆபிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று வயது பிள்ளை உள்ளிட்ட அந்த ஆறு பேர், பகாரோ (Bakaro) என்ற கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த 25 விவசாயிகள், மழை வந்ததால் குடிலுக்குள் ஒதுங்கிக்கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
லேசாக எரிந்து போனது போன்ற காயத்துடன் ஒருவர் உயிர் தப்பியதுடன், மின்னல் தாக்கிய அதிர்ச்சிக்கு உள்ளான எட்டு பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனல்.
மடகாஸ்கர் தீவில் மின்னல் தாக்குதல் அடிக்கடி நிகழ்வதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.