மராட்டியத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் 20 நாட்களில் புனேயை சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அகமதுநகர் மாவட்டம் ராகுரி பகுதியை சேர்ந்த 48 வயது நபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக புனேயில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஒரே மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது.
புனேயில் மேலும் 10 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.