இந்தியாவில் கொரோனா காரணமாக நேற்று மட்டும் 63 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் இதுவரை 251 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க மிக மோசமான வேகத்தில் பரவி வருகிறது.
உலகம் முழுக்க 275,276 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் .
உலகம் முழுக்க 11384 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.
இத்தாலியில்தான் அதிகமாக இந்த வைரசால் மக்கள் பலியாகி உள்ளனர்.
கொரோனாவால் இத்தாலியில் இதுவரை 4,032 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியா எப்படி இந்தியாவில் இதுவரை 251 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் நேற்று 63 பேர் இதனால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் வேகம் எடுத்துள்ளது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 222 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் மிக தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 23 பேர் இந்த வைரசில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மொத்தமாக் 5 பேர் இந்தியா முழுக்க இந்த வைரஸால் பலியாகி உள்ளனர். டெல்லியில், கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த வைரஸால் மக்கள் பலியாகி உள்ளனர்.இந்தியாவில் மார்ச் 15ம் தேதிக்கு பின்புதான் கொரோனா வைரஸ் வேகம் எடுத்துள்ளது. மார்ச் 16 மற்றும் 17 தேதிகளில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பலரை தாக்கி உள்ளது.
தமிழகத்தில்...
தமிழகம் என்ன லடாக்கில் 10 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 7 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகரில் 5 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.