web log free
October 01, 2023

புலிக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் விலங்குகள் சுதந்திரமாக நடமாடித் திரிவதை அவதானிக்க முடிந்தது,

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ப்ரோன்ஸ் வனவிலங்குப்பூங்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா எனப்படும் கொவிட்-19  என்ற கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு வயதான நடியா என்ற பெயர்கொண்ட மலையன் புலியே மனிதனின் மூலம்  கொவிட்-19 தொற்றுக்குள்ளான முதலாவது மிருகம் என நம்பப்படுகிறது

இந்தப்புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து அதற்கு அருகில் வாழ்ந்துவந்த இரண்டு சைபெரியன் புலிகள் மற்றும் ஆபிரிக்க சிங்கங்களுக்கும் அதே அறிகுறிகள் காணப்பட்டுள்ன.

அவைகளுக்கும் தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

நடியா, மற்ற ஆறு பெரிய புலிகளுடன்,  மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

குறித்த வனவிலங்குப்பூங்கா மார்ச் மாதம் 16 ஆம் திகதியன்று கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Last modified on Monday, 06 April 2020 20:55