web log free
April 19, 2025

இத்தாலியில் என்ன நடக்கிறது முழுமையான அலசல்

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 
 
உலகம் முழுவதும் 18 லட்சத்து 46 ஆயிரத்து 833 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 883 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக இத்தாலியில் பிப்ரவரி மாதம் கொரோனா பரவத்தொடங்கியது.
 
ஆனால் வைரசின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் தீவிரமடைந்தது. தினமும் சராசரியாக 700 முதல் 900 வரை உயிரிழப்புகளை அந்நாடு சந்தித்து வந்தது. 
 
மேலும், கோரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது.
 
இந்நிலையில், இத்தாலியில் 24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 363 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 431 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கை ஆகும். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 899 ஆக உள்ளது.
 
இத்தாலியில் கடந்த 24 நாட்களாக கொரோனாவுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு :
 
மார்ச் 19 - 427 பேர்
மார்ச் 20 - 627 பேர்
மார்ச் 21 - 793 பேர்
மார்ச் 22 - 651 பேர்
மார்ச் 23 - 601 பேர் 
மார்ச் 24 - 743 பேர்
மார்ச் 25 - 683 பேர்
மார்ச் 26 - 712 பேர் 
மார்ச் 27 - 919 பேர்
மார்ச் 28 - 889 பேர்
மார்ச் 29 - 756 பேர் 
மார்ச் 30 - 812 பேர் 
மார்ச் 31 -837 பேர் 
ஏப்ரல் 1 - 727 பேர்
ஏப்ரல் 2 - 760 பேர்    
ஏப்ரல் 3 - 766 பேர்
ஏப்ரல் 4 - 681 பேர்
ஏப்ரல் 5 - 525 பேர்
ஏப்ரல் 6 - 636 பேர்
ஏப்ரல் 7 - 604 பேர்
ஏப்ரல் 8 - 542 பேர் 
ஏப்ரல் 9 - 610 பேர்
ஏப்ரல் 10 - 570 பேர்
ஏப்ரல் 11 - 619 பேர் 
ஏப்ரல் 12 -  431 பேர்
 
மார்ச் 19-ம் தேதிக்கு (427 பேர்) பின்னர் மூன்று வாரங்கள் கழித்து முதல் முறையாக இத்தாலியில் நேற்று கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை (431 பேர்) மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதால் மக்களும், மருத்துவ ஊழியர்களும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். 
 
 
Last modified on Monday, 13 April 2020 03:51
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd