அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நடந்த கொரோனா சோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உலகில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் கொரோனா காரணமாக 1,292,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 76928 பேர் பலியாகி உள்ளனர். அதிகமாக் நியூயார்க்கில் மட்டும் 337,421 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். அங்கு இதுவரை 26365 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெள்ளை மாளிகையில் இருக்கும் ஸ்பெஷல் போர்ஸ் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர். அமெரிக்க அதிபர் டிரம்பின் பாதுகாப்பை உறுதி செய்யும் நபர்களில் ஒருவர். வெள்ளை மாளிகையில் வெஸ்ட்விங் பகுதியில் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
என்ன விவரம் இவர் குறித்த முழு விவரம் வெளியாகவில்லை. அதே சமயம் இவர் டிரம்பின் தனி பாதுகாவலர்களில் ஒருவர் என்றும் கூறுகிறார்கள். இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இவருக்கு கொரோனா வந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இவருக்கு தற்போது காண்டாக்ட் டிரேஸ் செய்ய முடியாததால் வெள்ளை மாளிகையில் வேறு யாருக்காவது கொரோனா இருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இவர் குறித்த முழு விவரம் வெளியாகவில்லை. அதே சமயம் இவர் டிரம்பின் தனி பாதுகாவலர்களில் ஒருவர் என்றும் கூறுகிறார்கள். இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இவருக்கு கொரோனா வந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இவருக்கு தற்போது காண்டாக்ட் டிரேஸ் செய்ய முடியாததால் வெள்ளை மாளிகையில் வேறு யாருக்காவது கொரோனா இருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.