web log free
October 01, 2023

குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த பெண்ணுக்கு சிறை

இங்கிலாந்தை சேர்ந்த டக்காடஸ் (வயது 42) என்ற பெண் இந்தோனேசியா சென்றிருந்தார்.

இவர் தனது விசா காலம் முடிவடைந்த பின்னரும் 4 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கி இருப்பது குடியேற்ற அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பாலி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வந்த டக்காடசை குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

விசா கலாம் முடிந்த பின்னரும் இந்தோனேசியாவில் தங்கி இருந்ததற்காக 3,500 அமெரிக்க டொலரை அபராதமாக செலுத்தும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதனை ஏற்காத டக்காடஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அத்துடன் குடியேற்ற அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடியேற்ற அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, டக்காடசுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.