web log free
April 16, 2026

10 பாக். இராணுவ முகாம்களை பந்தாடியது இந்தியா

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி பதிலடியில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 10 பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகளையும் ஊடுருவச் செய்து வருகிறது.

இதற்கு ராணுவத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் ராணுவ வீரர் ஹர்சரண் சிங் வீர மரணத்தை தழுவினார்.

இதனையடுத்து ராணுவம் உக்கிரமான பதிலடி கொடுத்தது. இதில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 10 பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு கடும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last modified on Friday, 12 June 2020 04:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd