உலகிற்கே கொரோனா வைரஸ் தொற்றை பரப்பிவிட்ட சீனாவில் தற்போது நாய்கறி திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சீனாவில் நாய்கறி இறைச்சி திருவிழா மிகவும் விஷேசமான திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்த விழா சீனாவின் குவாங்சி ஜூவாங்கில் உள்ள யூலின் நகரில் கடந்த 21ம் திகதி தொடங்கிய நிலையில் வரும் 30ம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவிற்காக பல்லாயிரம் நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படும். பல்வேறு இன நாய்களை அடித்து கொன்று ஆட்டை உரிப்பது போல் உரித்து தொங்கவிட்டு போட்டு வகை வகையான உணவுகளை தயாரித்தும், வித்தியாசமான சூப்களை தயாரித்தும் விற்பார்கள். இந்த விழாவில் பல ஆயிரம் மக்கள் கலந்து உண்டு உணவை உண்டு ரசிப்பார்கள்.
அத்துடன் உரிவைத்து வைக்கப்பட்டுள்ள நாய்களின் இறைச்சியை பலரும் விரும்பி வாங்கி செல்வார்கள். இந்த ஆண்டு நாய் இறைச்சி விழா வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. கொரானா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாய் இறைச்சி வாங்க மக்கள் அதிகம் கூடவில்லை. இதனால் அங்குள்ள வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே நாய் இறைச்சி திருவிழா நடத்துவது இதுதான் கடைசியாக இருக்கும், இனி நாய்கள் கொல்லப்படாத சூழல் சீனாவில் விரைவில் உருவாகும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.