ஒரு நாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இந்தியா உள்ளது. ஒரு நாள் கொரோனா உயிரிழப்பில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இந்தியா உள்ளது.
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இந்தியா உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 1.48 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்னர்.
அதில் 88.97 லட்சம் பேர் குணம் அடைந்தனர். தற்போதைய நிலையில் 53 லட்சம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 6.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 39.70லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 21.70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரானா தொற்றால் இதுவரை 11.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் கொரோனா தொற்றால் இதுவரை 7.83லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 1.16 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் 81597 பேரும், இந்தியாவில் 28,084 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் 55895 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 37143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 20257 பேர் பாதிக்கப்பட்டனர்.
உலகிலேயே அதிகபட்சமாக பிரேசிலில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 632 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரு நாளில் 587 பேர் பலியாகினர். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 390 பேர் மரணம் அடைந்தனர்.