அதிகமான மக்கள் பாதிக்கப்படும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனீக்களின் உடலில் காணப்படும் நச்சுத்தன்மை கொண்ட ஒரு பதார்த்தமே புற்றுநோய்க்கான சிறந்த மருந்து என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக மார்பக புற்றுநோய்க்கான மருந்தாக இது அமையும் என்பதும் அவர்களின் ஆய்வாக உள்ளது.
இந்த நச்சுத்தன்மை கொண்ட பதார்த்தமானது 60 நிமிடங்களில் புற்று நோய்க்கான செல்களை அழிக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.