web log free
April 30, 2026

விமான கடத்தல் முயற்சி

பங்களாதேஷ் அரசுக்கு சொந்தமான ‘பிமன் பிஜி 147’ வழித்தட எண் கொண்ட போயிங் ரக விமானம் டாக்கா விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சுமார் 5 மணியளவில் 142 பயணிகளுடன் டுபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கையில் துப்பாக்கியுடன் விமானியின் அறைக்குள் நுழைந்த ஒரு பயங்கரவாதி விமானியை மிரட்டி, விமானத்தை கடத்திச் செல்ல முயன்றான்.

இதையடுத்து, தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, அருகாமையில் உள்ள சட்டோகிராம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.

அதற்குள் சட்டோகிராமில் உள்ள ஷா அமானத் விமான நிலையத்தில் ஏராளமான பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டனர். மாலை 5.40 மணியளவில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியது.

அதில் இருந்த 142 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், உள்ளே இருக்கும் பயங்கரவாதியை தாக்கிப் பிடிக்க அதிரடிப்படையினர் நடிவக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd