கொரோனா வைரஸ் தொற்றுகாரணமாக மரணிக்குமு் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை புதைப்பது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில், ஐ.நாவும் அரசாங்கத்துக்கு நேற்றிரவு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடையும் தங்களுடைய சமூகத்தின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு, முஸ்லிம் சமூகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது இந்நிலையிலேயே ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், அரசாங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
“மரணமடைவோரின் பூதவுடல்களை தகனம் செய்வது அவரவர் கலாசார அடிப்படையைக் கொண்டவையாகும்” என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
“தொற்று நோயால் மரணிப்பவர்களின் சடலங்களின் மூலமாக வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு, அந்த சடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம், ஆதாரங்களால் உறுதிப்படுத்தவில்லை” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.