web log free
March 28, 2023

சுற்றுபயணிகளுக்கு விசா வழங்கு சவுதி தீர்மானம்


சவுதி அரேபியாவுக்குச் செல்லும் சுற்றுபயணிகளுக்கு மின்னியல் விசா வழங்க அதன் அமைச்சரவை அனுமதிஅளித்துள்ளது.

சவுதி அரேபியாவில் வேலை செய்வோர், வர்த்தகப் பயணம் மேற்கொள்வோர், புனிதப் பயணம் செல்லும் யாத்ரீகர்கள் ஆகியோருக்கு மட்டுமே விசா வழங்கும் நடைமுறை இதுவரை அங்கு பின்பற்றப்பட்டு வந்தது.

வெளிநாட்டவரை சவுதி அரேபியாவுக்குள் அனுமதிப்பது குறித்து நீண்ட நாட்களாக ஆலோசிக்கப்பட்டாலும், அந்நாட்டின் பழங்கால நடைமுறை அதற்கு இடங்கொடுக்கவில்லை.

அந்த நிலையை மாற்ற இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) பாடுபட்டு வருகிறார்.

விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள் சவுதி அரேபியத் தூதரகங்களும், துணைத் தூதரகங்களும் மின்னியல் விசாவை வழங்கலாம். ஆனால் அந்த முறை எப்போது நடப்புக்குக் கொண்டுவரப்படும் என்பது பற்றித் தகவல் ஏதும் இல்லை.