web log free
March 21, 2026

கொலம்பியாவில் தங்க சுரங்க வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன

கொலம்பியாவின் கால்தாஸ் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த ஐந்து தொழிலாளர்களின் உடல்கள் 5 மாதத்திற்கு பிறகு சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டன. தொடர்ந்து அங்கு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd