web log free
April 23, 2024

செவ்வாயில் வெற்றிகரமாகப் பறந்த ஹெலிகாப்டர்

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் நாசா அனுப்பிய ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறந்ததை அடுத்து விண்வெளி துறையில் அமெரிக்கா மீண்டும் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Ingenuity என பெயரிடப்பட்டுள்ள சிறிய ரக ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்ததாக நாசா அறிவித்துள்ளது.

இதன்மூலம், பூமியை தவிர மற்றொரு கிரகத்தில் முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

Ingenuity என்று பேர் சூட்டப்பட்டுள்ள இந்த helicopter-ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பிலிருந்து மேலே எழுந்து, அரை நிமிட நேரம் அதாவது 30 வினாடிகள் பறந்தது.

இந்த helicopter கடந்த பெப்ரவரி மாதம் Perseverance rover என்ற ஊர்தி செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் இறக்கப்பட்டபோது அதனுடன் சேர்த்து இறக்கப்பட்டது.

செவ்வாய்க்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்க க் கூடுமா என்ற ஆராய்ச்சியின் நிமித்தமாகவே இந்த Perseverance rover அங்கு தரை இறக்கப்பட்டது.

இந்த helicopter சுமார் 2 கிலோ கிராம் எடையுள்ளது. 

இந்த helicopter கடந்த செவ்வாயன்று, செவ்வாய்க்கிரகத்தின் தரைப்பரப்பிலிருந்து மூன்று மீட்டர் உயரம் எழுந்து 30 விநாடிகள் பறந்தது என்பது விண்வெளி ஆராய்ச்சியைப்பொறுத்தளவில் பிரதான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த helicopter ஐ வடிவமைப்பதற்கு NASA வின் Jet Propulsion Laboratory என்ற ஆய்வு கூடத்திற்கு ஆறுவருடங்கள் எடுத்திருக்கின்றன என்பதிலிருந்தே இந்த சவால் எப்படிப்பட்ட ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

Wright சகோதரர்கள் முதன்முதலாக பூமியின் தரையிலிருந்து விமானத்தை எழுந்து பறக்கச்செய்ததற்கு ஒப்பான விஞ்ஞான சாதனை என்று இது பார்கப்படுவதால் இந்த helicopter புறப்பட்ட இடப்பரப்பிற்கு Wright Brothers Field என்று பேர் சூட்டியிருக்கிறார்கள். இந்த நிகழ்விற்கும் அதே First flight என்ற அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. Wright brothers இன் first flight இற்கு மரியாதை செலுத்தும் விதமாக 1903 இல் Wright சகோதரர்கள் பறந்த விமானத்தின் சிறகிலிருந்து எடுக்கப்பட்ட மிகச்சிறிய பகுதியொன்று, இந்த helicopter இல் பொருத்தப்பட்டுள்ள solar panel மீது இணக்கப்பட்டிருக்கிறது.

Helicopter கள் மற்றும் Drone கள் பூமியில் பறப்பது சாதாரண நிகழ்வு. செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பில் பறப்பது ஏன் சாதனை என்ற அளவில் பார்க்கப்படுகிறது.

பூமியில் நம்மைச்சுற்றி atmosphere என்ற வளிமண்டலம் இருக்கிறது. Helicopter ஒன்று பறப்பதற்கு இந்த வளிமண்டலம் தேவை. Helicopter இன் மேற்பகுதியில் உள்ள blades அல்லது rotors என்ற விசிறி சுழன்று lift என்ற மேலே எழும் force ஐக்கொடுப்பதற்கு இந்த வளிமண்டலம் தேவை. செவ்வாய்க்கிரகத்திலும் இந்த வளிமண்டலம் உண்டு என்ற போதும் இது பூமியின் வளிமண்டலத்துடன் ஒப்பிடும் போது 100 மடங்கு செறிவு குறைவானது. ஆகவே இந்த helicopter ஐ பூமியில் பரிசோதிக்க காற்றழுத்தம் மிக மிகக் குறைவான சூழல் தேவை.

அதே போல gravity என்ற புவியீர்ப்பு விசை, பூமியோடு ஒப்பிடுகையில் அங்கு மிகக் குறைவு. இது பூமியின் விசையில் மூன்றிலொரு பங்காகும். Ingenuity என்ற helicopter இன் மற்றொரு சாதனை என்று பார்க்கப்படுவது, பூமியல்லாத மற்றொரு கிரகத்தின் தரைப்பரப்பிலிருந்து மேலே எழுந்து பறந்த முதலாவது பறக்கும் சாதனம் என்பதுதான்.

2035 ஆம் ஆண்டில் மனிதன் செவ்வாய்க்கிரகத்தில் அடியெடுத்து வைப்பான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிகழும் போது, அங்கு அவர்கள் பயன்படுத்த இவ்வாறான helicopter கள் தேவைப்படும் என்றும் தரையில் அவர்கள் எதிர்நோக்கக்கூடிய தடைகளை அல்லது மனிதருக்குப் பாதுகாப்பில்லாத சூழல்களை மேலே பறந்து சென்று பார்வையிட்டு அறிந்துகொண்டபின், தரையில் அவர்கள் இறங்க முடியும் என்பதும் நீண்டகால நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.