web log free
February 25, 2026

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் 24 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலம் நாஷிக்கில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, கொரோனா நோயாளிகள் 24 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்ட்ரா, டெல்லி உள்பட பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு விரைவாக தீர்க்கப்படும் என பிரதமர் திரு.நரேந்திர மோடி நேற்று உறுதி அளித்தார். இந்த நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலம் நாஷிக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கிலிருந்து சிலிண்டர்களில் நிரப்பும்போது, வால்வில் கசிவு ஏற்பட்டு அதிகளவில் ஆக்சிஜன் வீணாக வெளியேறியது.

இதனால் மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக வென்டிலேட்டரில் இருந்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd