web log free
June 07, 2023

ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றின் கேலிச்சித்திரத்திற்கு எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் பிரபல நாளிதழான The Daily Telegraph இல் வெளியான கேலிச்சித்திரமொன்று இந்துக் கடவுள்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும்,  இதுதொடர்பில் குறித்த ஊடகம் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் ஆஸ்திரேலியாவிலுள்ள இந்து அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் The Daily Telegraph இல் மே மாதம் 4ம் திகதி வெளியான செய்திக்கட்டுரை ஒன்றில் குறிப்பிட்ட இந்த கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது.

பல்கலாச்சார சமூகங்கள் வாழும் ஆஸ்திரேலியாவில் எந்தவொரு நம்பிக்கையையும், மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும், ஆஸ்திரேலியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் இந்துக்களின் நம்பிக்கையை The Daily Telegraph முற்றிலும் அவமதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எதையாவது சித்தரிக்க பல வழிகள் இருக்கும்போது ஒருசாராரின் மத நம்பிக்கையை ஏன் அவமதிக்க வேண்டும் எனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த கட்டுரையை வெளியிட்டதற்காக The Daily Telegraph மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் இந்துக்களின் நம்பிக்கைகள் தொடர்பில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தமது ஊழியர்களுக்கு அறிவூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தி Gaurav Chauhan என்பவர் சார்பில் கையெழுத்து வேட்டையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

Last modified on Thursday, 06 May 2021 09:21