தடுப்பு ஊசிக்கு பதிலாக மூக்கில் உரியும் தடுப்பு மருந்து!!!
இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பானது பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட படி புதுடெல்லியில் ஆகஸ்ட் 17ம் திகதி மூக்கின் மூலம் உறிஞ்சப்படும் வைரஸ் தடுப்பு மருந்தின் 2ம் கட்ட பரிசோதனை நடாத்தப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை தகவல் தெரிவித்துள்ளது.
இவ் மருந்து தயாரிப்பில் இந்நிறுவனமானது அமெரிக்காவில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் தெழிநுட்ப அனுமதியை பெற்றுள்ளது.
இம்மருந்தின் 1ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை 18 வயது தொடக்கம் 60 வயது பிரிவினருக்கு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
இம்மருந்தானது பாதுகாப்பானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது என விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் தென்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவெக்சின் தடுப்பு ஊசிகளே தற்போது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
ஆகையால் இம்முயற்சியும் கைக்கொடுக்கும் என நம்பப்படுகின்றது.