web log free
January 01, 2026

இன்று முதல் தாஜ்மகால் ரீ ஓப்பன்

கொரோனா காரணமாக கடந்த 2020 மார்ச் 17ம் திகதி தாஜ்மகால் மூடப்பட்டது.
இந்நிலையில் தாஜ்மகால் இன்று முதல் இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மகாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக ஆகஸ்ட் 21, 23 மற்றும் 24 ஆகிய  திகதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் தாஜ்மகால் மூடப்படும். இரவு 8:30-9:00 ,9:00-9:30 ,9:30-10:00 ஆகிய நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்காக ஆக்ராவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அலுவலகத்தில் சுற்றுலாவாசிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் .எனினும் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி ஒரு நேரத்தில் 50 சுற்றுலாவாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ணாகர் அறிவித்துள்ளார்.

Last modified on Saturday, 21 August 2021 09:42
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd