web log free
December 02, 2023

ஆப்கானிஸ்தானில் மீண்டும் பதற்றம்

ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை துப்பாக்கி முனையால் கைப்பற்றிய தலிபான்கள் ஷரியத் சட்டத்தின் படி ஆட்சி நடத்துவதாக கூறி வந்த நிலையில் தற்சமயம் தலிபான்கள் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளது.

தலிபானை பற்றிய பல பரபரப்பான தபவல்கள் வெளியாகியுள்ள நிலையில்  ஜம்மு காஷ்மீர் முஸ்லீம்களுக்காக தலிபான்கள் குறள் கொடுக்க உரிமை உண்டு எனவும் அனைத்து உலக வாழ் முஸ்லீம்களுக்காகவும் தலிபான்கள் குறள் எழும்பும் எனவும் தலிபான் செய்தி தொடர்பாளர் சபிஹீல்லா முஜாஹித் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் தலிபான்களின் முக்கிய புள்ளிகளான இருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கசியத்தொடங்கின. தலிபான் தலைவர் ஹகுன் தாதா மற்றும் பிரதமர் அப்துல் கனி ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவ்வாறு வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தலிபான்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து உண்மை நிலை அறியப்படாத நிலையில் நேற்று தலிபான் பிரதமர் அப்துல் கனி தான் சுகமாக தீர்க்க உடல்நலத்துடன் இருப்பதாக ஓடியோ பதிவொன்று வெளியானது. நவீனமயப்பட்ட உலகில் இன்று ஓடியோ மூலம் செய்தி வெளியானது குறித்து நம்பகத்தன்மை குறைவாகவே காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Last modified on Wednesday, 15 September 2021 10:43