ஆஸ்திரேலியாவின் தலைநகரம் கான்பெரா 40 பில்லியன் டாலர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் கைவிடப்பட்ட பிறகு பாரிஸுடனான உறவை சரிசெய்ய முயற்சிக்கிறது.
ஆஸ்திரேலிய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் பரஸ்பர நன்மை பயக்கும் என ஆஸ்திரேலியாவின் வர்த்தக அமைச்சர் கூறினார்
ஆஸ்திரேலியா கடந்த வாரம் பிரான்சின் கடற்படை குழுவுடனான அணுசக்தி அல்லாத நீர்மூழ்கிக் கப்பல்கள் உற்பத்தி ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் தொழில்நுட்பத்துடன் குறைந்தது எட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க தீர்மானம் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா முதுகில் குத்தியதாக கருதும் பிரான்ஸ் தனது தூதர்களை கான்பெரா மற்றும் வாஷிங்டன் நகரங்களிலிருந்து திருப்பி அழைத்துக்கொண்டது.
ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அக்டோபர் 12 ஆம் திகதி வர்த்தக ஒப்பந்தம் குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானம் எடுத்துள்ளது.