web log free
March 24, 2023

2025 இற்குள் படையெடுக்கவுள்ள சீனா

எதிர்வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தாய்வான் மீது சீனா முழுமையாக படையெடுக்கும் என தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் அச்சம் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 4 நாட்களில் சுமார் 150 முறை சீன போர் விமானங்கள் தாய்வானின் வான் எல்லைக்குள் அத்துமீறி பறந்ததாக கூறிய அமைச்சர் சியூ குவோ செங் , கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவுடன் பதற்றமான சூழல் நிலவுவதாக தாய்வான், சீனாவுக்கு உட்பட்ட பகுதி எனவும், தேவைப்பட்டால் பலத்தை பயன்படுத்தி கைபற்றப்படும் எனவும் சீனா தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், தங்கள் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பறிகொடுக்கப் போவதில்லை என தாய்வான் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Last modified on Wednesday, 06 October 2021 09:16