பாடசாலை பேருந்து சாரதியால் பிணையமான வைக்கப்பட்டிருந்த 51 மாணவர்களை இத்தாலிய பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
மாணவர்களைப் பிணையாளிகளாய் பிடித்துவைத்ததுடன் அவர்கள் இருந்த பேருந்திலும் குறித்த சாரதி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியிருக்கிறார்.
மத்திய தரைக்கடலில் (Mediterranean) உயிரிழந்த அகதிகளுக்காக அவர் அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.
30 நிமிடங்களுக்கு நீடித்த அந்தச் சம்பவத்தின்போது சில மாணவர்கள் கட்டி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் மாணவர்களுக்குப் பெரிதாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதை இத்தாலிய பொலிஸார் உறுதிசெய்தனர்.
இத்தாலியக் பொலிஸார், சரியான நேரத்திற்குச் சென்று உதவவில்லையென்றால்அது விபரீதத்தில் முடிந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.