web log free
November 22, 2024

அதிர்ச்சி வேக்சினேசன் மொடோனா

பின்லாந்து மற்ற நோர்டிக் நாடுகளுடன் சேர்ந்து சில வயதினருக்கு மொடோனா தடுப்பூசியின் பயன்பாட்டை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. 

ஏனெனில் இதய வீக்கம் அதிகரிக்கும் அபாயம் இந்த மொடோனா தடுப்பூசியில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பின்லாந்து இந்த நடவடிக்கையை புதன்கிழமை மூன்று அண்டை நாடுகளின் ஒத்த முடிவுகளின் படி பின்பற்றியது. 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு மொடோனா பயன்படுத்துவதை ஸ்வீடன் நிறுத்தியது, 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு சுவிஸ் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கப்படாது என்று டென்மார்க் கூறியது, அதற்கு பதிலாக 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி பெற நோர்வே வலியுறுத்தியது. இவ்வாறு பல நாடுகளில் இந்த தடுப்பூசியின் வீரியம் தெரிந்து அதனை தடை செய்துள்ளனர்.

30 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு அதிகாரிகள் மொடோனா தடுப்பூசியின் டோஸை கொடுக்க மாட்டார்கள் என்று ஃபின்னிஷ் சுகாதாரம் மற்றும் நலன்புரி நிறுவனம் வியாழக்கிழமை கூறியது. அதற்கு பதிலாக அவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும். மேலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் சற்று அதிகமாக இருப்பதாக அரசு நிறுவனம் கண்டறிந்துள்ளது.

புதன்கிழமை, ஸ்வீடிஷ் பொது சுகாதார நிறுவனம் 1991 இல் பிறந்தவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றியபின்னர் மாரடைப்பு மற்றும் பெரிகார்டிடிஸ் ஏற்பட்டுள்ளதால் ஸ்பைக்வாக்ஸ் எனப்படும் மொடோனா கோவிட் தடுப்பூசியை நிறுத்துவதற்கு உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கை முன்னெச்சரிக்கை மற்றும் இதய தசை அல்லது இதயப் பையின் வீக்கம் போன்ற பக்க விளைவுகளின் அதிக ஆபத்து காரணமாக முன்னெடுக்கப்பட்டது என்று எந்நிறுவனம் கூறியது.

ஃபைசர் அல்லது மொடோனா கோவிட் தடுப்பூசி வைத்திருந்தவர்களுக்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இது பெரும்பாலும் ஆண் வாலிபர்களையும் இளைஞர்களையும் பாதித்திருப்பதாகவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகின்றன.

நோர்டிக் ஆய்வின் ஆரம்ப தகவல்களை மதிப்பீடு செய்த ஐரோப்பிய மருந்துகள் மொடோனா தடுப்பூசியில் பாதகமான எதிர்வினை உள்ளதாக குழுவுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறான அதிர்ச்சி தரும் பல உண்மைகள் மொடோனா தடுப்பூசியை பற்றி கசிந்த வண்ணம் உள்ளது. எனவே மக்களாகிய நீங்கள் சற்று சிந்தித்து செயற்படுங்கள்.

Last modified on Saturday, 09 October 2021 11:55
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd