web log free
March 28, 2023

வங்க தேசத்தில் இந்துக் கோவில் உடைப்பு!

வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை விழா நடந்தது. இந்த நிலையில் கொமில்லா நகரில் உள்ள இந்து கோவில்களில் கும்பல் ஒன்று திடீரென்று தாக்குதல் நடத்தியது.

துர்கா பூஜை விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்த பக்தர்களை தாக்கினர்.

அதேபோல் கொமில்லா நகருக்கு அருகே உள்ள சந்த்பூரின் ஹாஜிகன்ஜ், சட்டோகிராமின் பன்ஷ்கலி, காக்ஸ் பஜாரின் பெகுலா ஆகிய நகரங்களில் உள்ள இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.