web log free
March 28, 2023

கனடா வாழ் இலங்கை தமிழருக்கு கிடைத்த வெற்றி பரிசு

கனடாவில் கொரோனா தொற்று காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு தவிந்துவந்த இலங்கைத்தமிழர் ஒருவருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.

கனடாவின் Barrie நகரில் வசிந்துவரும் 42 வயதான பிரதீபன் சிவராசா என்ற இலங்கை நபருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.

இதேவேளை, Lotto Max லொட்டரியில் பிரதீபன் சிவராசாவுக்கு $500,000 (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 9 கோடி) பணத்தொகை கிடைத்துள்ளது.

இதுகுறித்து பிரதீபன் சிவராசா தெரிவிக்கையில், கொரோனாவால் எனது ஊழியர்கள் வருவமானத்தை இழப்பதை நான் விரும்பவில்லை, அதனால் எனது சொந்த செலவில் அவர்களுக்கு நிதியுவதி அளித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது லொட்டரியில் விழுந்த பணத்தை எனது வியாரத்தில் முதலீடு செய்யவதாக தெரிவித்துள்ளார். மேலும் லொட்டரியில் விழுந்த 9 கோடி என்னுடையது என்று என்னால் நம்பவே முடியவில்லை என கூறியுள்ளார்.