web log free
March 24, 2023

ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய சீனா!

சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் பரிசோதனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒலியை விடவும் 5 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பயணிப்பது தான் "ஹைப்பர்சோனிக்" ஆகும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா இன்னும் அடங்க மறுக்கிறது. ஆனால் உலகின் வல்லரசு நாடுகள் தாங்கள்தான் பலம் என்று ஆயுத ஆதிக்கத்தை நிரூபித்து வருகின்றன.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, வடகொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து அணு ஆயுத பலத்தை காண்பித்து வருகின்றன. ராணுவ பலத்தை அதிகரிக்க விரும்பும் நாடுகள் பலவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணை தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன.