இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
“ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு விடுதலை கிடையாது என்றும் ஏழுபேர் விடுதலை குறித்துக் கூறப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடுங்கள்” என்றும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
“மாநில அந்தஸ்தில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரான தமிழிசை சௌவுந்திரராஜனுக்கு டெல்லியின் கொள்கைகள் தெரியாது. இதுகுறித்து டில்லிதான் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஏழு பேர் விடுதலைக்கு டெல்லி இணங்காது என்றும் அவர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என்றும் சுப்ரமணியன் சுவாமி, குறிப்பிட்டுள்ளார்.