2025ஆம் ஆண்டு வரை மக்கள் குறைவாக சாப்பிடுங்கள்.... வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங்!
வடகொரியாவில் கடந்த ஆண்டு பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்ததாலும், விவசாயத் துறையானது போதுமான உற்பத்தியை நிறைவேற்றத் தவறியதாலும் அங்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ,கொரோனாப் பரவல் காரணமாக அண்டைய நாடுகளின் எல்லைகளையும் வடகொரிய அரசு மூடியுள்ளதால் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெறமுடியாமல் திணறி வருகின்றனர்.
அந்நிலையில் ,2025ஆம் ஆண்டு வரை நாட்டு மக்களை குறைந்தளவு உண்ணுமாறு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் உத்தரவிட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ,இது குறித்து உலக நாடுகள் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.