ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓடும் ரயிலில் மர்ம நபர் ஒருவர் பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தி துப்பாக்கிச் சூடும் நடத்திய பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகளை கொடூரமாக தாக்கிய மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி குத்து சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. க்கியோவில் அண்மையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகள் நிறைவடைவதற்கு முதல் நாள் ஓடக்யூ ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென பயணிகளைத் தாக்கினார்.
இந்நிலையில் டோக்கியோ ரயில் பயணிகள் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டோக்கியோவில் இருந்து நேற்று மாலை மின்சார ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் கோகுரியோ ரயில் நிலையம் அருகே சென்ற போது அதில் பயணித்த ஜோக்கர் உடை அணிந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பயணிகளை கத்தியால் குத்த தொடங்கினார். அத்துடன் துப்பாக்கி சூடும் நடத்தினார்.
இதனையடுத்து ரயில் நிலையத்தை முழுமையாக சுற்றி வளைத்த போலீசார் சாகவசமாக அமர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை கைது செய்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சக பயணிகளைப் போல அமர்ந்து சிகரெடி பிடித்து கொண்டிருக்கும் நபர், திடீரென யாரும் எதிர்பாராத போது சரமாரியாக அருகில் இருப்பவர்களை கத்தியால் குத்துகிற காட்சிகள் அந்த வீடியோக்களில் இடம் பெற்றுள்ளன.