web log free
April 20, 2024

மாலியில் கிராம மக்கள் 130 பேர் படுகொலை

 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது.

குறிப்பாக தோகோன் பழங்குடியினர் அவ்வப்போது புலானி மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தி ஏராளமானவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மோப்டி பிராந்தியத்தில் புலானி மக்கள் அதிகம் வசிக்கும் ஒக்சாகாகோவ் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் தோகோன் இனத்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.

அங்கு அவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் பலரை வெட்டி சாய்த்தனர்.

சற்றும் ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 130 பேரை கொன்று குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.