புதுடெல்லி:
தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு நாட்டின் பல்வேறு நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் தீபாவளி தொடங்குவதற்கு முன்பே காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. தீபாவளிக்கு பிறகு இன்று காலை 6 மணி நிலவரப்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது என்றும், காற்றின் தரக் குறியீடு 533 ஆக உள்ளதாகவும் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியை ஒட்டி உள்ள நொய்டா, குருகிராம், காசியாபாத் மற்றும் கிரேட்டர் நொய்டாவிலும் காற்று மாசு அதிகமாக இருந்தது. நாளை மாலை முதல் காற்றின் தரம் ஓரளவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.