web log free
November 22, 2024

ஆட்டை அறிவீரோ ...

 

ஆட்டை அறிவீரோ...

மேயும் ஆட்டையறீவீரோ.......

 

ஆண்டு பல தாண்டி பல காலங்காலமாக....

புற்களை மேய்வதானால்.......

புல்லுக்கு ஒரு நன்றி சொல்ல வருதாம்......

கொழுத்த குரும்பாடு கூட்டமொன்று....

 

"ஏய்ச்சி பிழைக்கலைங்கோ...

நான் ஏய்ச்சி பிழைக்கலைங்கோ.....

என்று மயக்கும் வார்த்தை சொல்லி...

ஆடு நன்றி சொல்லவருதாம்....."

 

"எப்படி சொல்லிருக்கும்...."

 

அப்பாவி புற்களையும்...

சூழ்சியாய் பார்த்திவிட்டு.....

 

தீவனம் தருவதுவாய்...

வாய் கிழிய சொல்லிவிட்டு

ஆடு புல்லின் தலையினிலே...

ஐயோ புளுக்கை போட்டதுவே............

 

தீவனம் என்று சொல்லி

புல்லும் புளுக்கையை 

பார்த்ததுவாம்...........

 

"தின்னவும் முடியவில்லை 

துப்பவும் முடியவில்லை....."

 

அந்த கதைதானோ...

நம் நாட்டு கதையும் இன்று....

 

அண்ணாந்து பார்க்கும் வண்ணம்..

கண்கவர் கட்டிடங்கள்.....

பளிங்கால் செய்ததுபோல்....

அதிவேக நெடுஞ்சாலைகள்....

 

இருந்தும் என்ன அதில்

குடியேற ஆளில்லையே....

பளிங்கான பாதையிலே 

இன்று பாடைகள் செல்கிறதே....

 

மக்கள் ஆணையெல்லாம்

இன்று காற்றோடு பறக்கிறதே...

விலைவாசி நிலையைக்கண்டு

வாய்வரை வந்த பசி....

விரதங்கள் இருக்கிறதே....

 

ஆண்டாண்டு காலமாக 

ஆட்சிகள் செய்பவரே

சுரண்டலும் ஆசைகளும்

இன்னும் சலிக்கலியோ....

 

வெத்து வேட்டுக்காக...

உங்கள் சொந்த தேவைக்காக...

குடும்பமாய் கூடிவந்து

கொடுமைகள் செய்வது ஏன்...

 

கப்பல் கவிழ்ந்து அங்கு

பிஞ்சி குழந்தை எல்லாம்...

மண்ணில் புதைகிறது...

 

வெள்ளாமை காடு எல்லாம் 

இன்று வெறுமையாய்

நிற்கிறது...

 

உங்கள் சூழ்ச்சி நிலையை

கண்டு தீயும் கருகிடுமே...

 

நான் சொன்ன புற்செடி போல்..

இன்று எங்கள் வாழ்க்கையும் ஆனதுவே...

 

மாறுமா இந்த நிலை..?????

 

ஆட்டை அறிவீரோ மேயும் ஆட்டை அறிவீரோ......

 

(என் நெஞ்சம் கொண்ட ஈரம் )

                            

எம்.ராமதாஸ் 

இறம்பொடை

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd