web log free
March 29, 2024

உலகை கதிகலங்க செய்யும் ஒமிக்ரோன் வைரஸ்- வெளியானது விபரம்!

உலகில் 12 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆபிரிக்காவின் தென் பிராந்தியத்தில் முதலில் கண்டறியப்பட்ட வீரியம் கொண்ட கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு தொற்றிய நபர்கள் அதிகளவான ஐரோப்பிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் மாத்திரம் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2021 நவம்பர் 28 ஆம் திகதி வரை அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரம் பின்வருமாறு.

02 பேர் கனடாவிலும் 13 பேர் நெதர்லாந்திலும் ஒருவர் இத்தாலியிலும் ஜேர்மனியில் 03 பேரும் பிரித்தானியாவில் 02 பேரும் அடையாளம் காணப்பட்ட அதே நேரம் டென்மார்க்கில் இருவரும் அவுஸ்திரேலியாவில் 03 பேரும் பெல்ஜியத்தில் 01 நபரும் 02 பேர் ஹொங்கொஙிலும் தலா ஒருவர் வீதம் இஸ்ரேலிலும் போஸ்வானாவிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேபோன்று தென் ஆபிரிக்காவில் 100க்கும் குறைவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.