web log free
September 03, 2025

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்

பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றின் பணியாளர்கள் கும்பல் ஒன்று, வெள்ளிக்கிழமையன்று இலங்கையர் ஒருவரை சித்திரவதை செய்து கொன்று அவரது உடலுக்கு தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலை ஊழியர்கள் மேலாளரை சித்திரவதை செய்ததாக மாகாண அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹசன் கவார் தெரிவித்தார்.

இதுவரை மொத்தம் 50 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இது பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என்று கூறியுள்ளார்.

Last modified on Saturday, 04 December 2021 01:35
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd