web log free
April 19, 2024

சீனாவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகள் விதித்தன. இது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள்.

அப்போது, இருவரும் வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்துகிற வகையில், ஜனவரி 1-ந் திகதி முதல் இரு நாடுகளும் ஒன்றின்மீது மற்றொன்று கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்துகொண்டனர்.

இது 90 நாட்களுக்கு நீடிக்கும். இரு நாடுகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இப்போதும் நேற்று முன்தினம் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவினர் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், வர்த்தக அமைச்சர் ஸ்டீவன் மனுசின் தலைமையில் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இதையொட்டி டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நமது நாடு பெரிதான விதத்தில் செயல்படுகிறது” என குறிப்பிட்டார்.