இந்தியா முழுவதும் புலிகள் மற்றும் புலிகள் வசிக்கும் இடங்கள்
இந்தியா முழுவதும் புலிகள் மற்றும் புலிகள் வசிக்கும் காடுகளை பாதுகாக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
"புலிகள் திட்டம் " (Project Tiger ) எனப் பெயரிடப்பட்டுள்ள இத் திட்டத்திற்காக பல்வேறு தவணைகளாக மத்திய அரசு நிதியை ஒதிக்கியுள்ளது.
ஒதுக்கப்பட்டது நிதி
இதன் முதல் தவணையாக ரூ .2.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தவணையாக ரூ 1.60 கோடியும் மூன்றாவது தவணையாக ரூ.1.89 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் மூலம் புலி வேட்டை தடுப்பு , காட்டு வளங்களை பாதுகாத்தல் , காட்டு தீ ஏற்படாமல் தவிர்க்க கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ரூ.6 கோடி திட்டத்தில் பாதுகாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய , மாநில அரசுகளின் நிதியுதவி
மத்திய , மாநில அரசுகளின் நிதியுதவியுடன் புலிகளை பாதுகாக்கும் பணிகளும் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.