web log free
March 28, 2024

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்றில் இருந்து அதிக பாதுகாப்பு கிடைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,

கர்ப்ப காலத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், கடுமையான கொரோனா தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது 60 சதவீதம் குறைவாக உள்ளது.தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வலுவான பாதுகாப்பு கிடைக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை 20 குழந்தை மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்பட்ட 6 மாதங்கள் வரையிலான 379 குழந்தையிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது”.

இது குறித்து ஆராய்ச்சியாளர் டெல்மேன் கூறும்போது.
‘தடுப்பூசி செலுத்திக்கொண்ட தாய்மார்களுக்கு பிறந்த 6 மாதங்களுக்கு குறைவான குழந்தைகள் கொரோனாவால் அனுமதிக்கப்படுவது 61 சதவீதம் குறைவாக இருந்தது.கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 84 சதவீதம் பேர் கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பிறந்தவர்கள். தடுப்பூசி போடாத தாய்க்கு பிறந்த ஒரு குழந்தை இறந்தது.

இளம் குழந்தைகளை பாதுகாக்க தாய் வழி தடுப்பூசி மிகவும் முக்கியமான வழியாகும். தாய் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்காக கர்ப்ப காலத்தில் எந்த நிலையிலும் தடுப்பூசி போடுவது முக்கியம்” என அவர் கூறினார்.