மங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து பணம், அலைபேசி உள்ளிட்டவைகளை கைப்பற்றியுள்ளனர்.
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. பொலிஸாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்jநிலையில், மங்களூரு பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நகர குற்றப்பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் குற்றப்பிரிவு பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனையின்போது ஐந்து விலையுயர்ந்த அலைபேசிகளும் ரூ.4.20 இலட்சம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.