web log free
February 08, 2023

உயிரை கையில் பிடித்து ஓடிவிடுங்கள் - உக்ரைன் படையினருக்கு ரஸ்ய வீரர்கள் எச்சரிக்கை

மரியுபோல் நகரில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி விட்டோம் என்று ரஷியா அறிவித்துள்ளது. அந்நகரம் உக்ரைன் படையிடம் இருந்து அகற்றப்பட்டது என்றும் சில வீரர்கள் சரண் அடைய மட்டுமே புறநகர் பகுதியில் உள்ளனர் என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷியா கெடு விதித்துள்ளது. மரியுபோல் நகரில் இன்றும் சண்டையிடும் உக்ரைன் வீரர்கள் சரண் அடைய கெடு விதிக்கப்படுகிறது. அவர்கள் இன்று காலை 6 மணி முதல் (மாஸ்கோ நேரம்) தங்களது ஆயுதங்களை போட்டு விட்டு உயிரை காப்பாற்றி கொள்ள சரண் அடைய வேண்டும் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10.00: மரியுபோலின் தலைவிதியை போர் அல்லது ராஜதந்திரம் மூலம் தீர்மானிக்க முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மரியுபோலின் நிலைமை மனிதாபிமானமற்றது. ரஷியா அங்குள்ள அனைவரையும் வேண்டுமென்றே அழிக்க முயற்சிக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

06.40: உக்ரைன் போரில் ரஷிய ராணுவ ஜெனரல் விளாடிமிர் ஃப்ரோலோவ் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கல்லறையில் புதைக்கப்பட்டதாகவும் ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ் தெரிவித்துள்ளார்.

03.10: உக்ரைன் தலைநகர் உள்பட பிற நகரங்கள் மீது ரஷியா மீண்டும் தாக்குதல்களை தொடங்கி உள்ளது. தனது போர் கப்பலை இழந்து விட்ட நிலையில், உக்ரைன் மேற்கு நகரங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்துமாறு ரஷிய ராணுவ தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உக்ரைன் ராணுவ தளங்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ரஷிய படைகள் தெரிவித்துள்ளன.

02.20: ரஷியா இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் உக்ரைனில் தனது அடுத்த கட்ட தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்கலாம் என அமெரிக்க ராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து உக்ரைனுக்கு அதிக பீரங்கி மற்றும் வெடிமருந்துகளை அனுப்ப வேண்டும் என்று தோழமை நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

01.29: மரியுபோல் நகரின் அனைத்துப் பகுதிகளையும் உக்ரைன் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றி உள்ளதாக ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த போரின்போது ஏப்ரல் 16 ஆம் தேதி வரை, துறைமுக நகரமான மரியுபோலில் உக்ரைன் ராணுவம் 4 ஆயிரம் வீரர்களை இழந்து விட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.

12.40: போர் நடைபெறும் உக்ரைன் நகரங்களில் இருந்து சனிக்கிழமை மட்டும் 1,449 பொதுமக்கள் மனிதாபிமான பாதைகள் வழியே வெளியேற்றப் பட்டுள்ளதாக உக்ரைன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

16.04.2022

21.30: உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷியா படை எடுப்பிற்கு பின்னர், இதுவரை 50 லட்சம் உக்ரைன் மக்கள் தங்களை வீடுகளை இழந்துள்ளதாகவும் ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.

19.30: லிசிசான்ஸ்க் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ரஷியப் படைகள் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். தாக்குதலின் போது சுத்திகரிப்பு ஆலையில் எரிபொருள் இல்லை என்றும் எண்ணெய் கழிவுகள் தீப்பற்றி எரிவதாகவும் அவர் கூறினார்.

18.15: பெலாரசில் இருந்து புறப்பட்ட ரஷிய போர் விமானங்கள் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் பகுதியில் ஏவுகணைகளை வீசியதாகவும், அங்கு உக்ரைன் வான் பாதுகாப்பு படையினரால் நான்கு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.

17.00: தலைநகர் கீவ் மீது ரஷியா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் இன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஒருவர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறினார். தலைநகர் கீவுக்கு வெளியே 900க்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

16.00: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன்- ரஷியா இடையேயான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார். இந்நிலையில், ரஷியாவிற்கு எதிராக இங்கிலாந்து அரசு பொருளாதார தடையும் விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷியாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

12.00: உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசு தொடர்ந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு மாற்றினால், "கணிக்க முடியாத விளைவுகள்" ஏற்படும் என அமெரிக்காவை ரஷியா எச்சரித்துள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.